Thursday, 14 December 2017

யோகா

மாடியில் யோகம்
நினைவலைகள் அடிக்க
விழித்துப் பார்த்தால்
பகல் நிலவில் ஒரு பகல் கனவு
வாடை காற்றின் புத்துணர்ச்சி
கார்த்திகை பனியின் ஈரம்
இளங்காளை கதிர் வீசி வரவேற்கிரது
ஒரு புதிய காலை..


Monday, 25 September 2017

நித்திரை

உன்னை அன்போடு  வரவேற்கிறேன் ஒவ்வொரு நாள் இரவும்
நீ வராத நாட்களெல்லாம் என்னுடைய பகலெல்லாம் வெள்ளை

உன் குறும்படத்தால், முடியாத ஆசையும் கருப்பு வெள்ளையாய்  கண் முன்னே காட்டுகிறாய்

சிலரிடம் நீ கனவில் கதைக்கிறாய்
பலரிடம்  நீ அசதியில்நகைக்கிறாய்

என் பெண்களுக்கோ உன்னுடன் அளவாட ஆசை தான்..
உண்மையில் நேரம் போவதோ, அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு மட்டுமே 😏

என்  அம்மாவை மட்டும் நீ அதிகம் பார்க்க வருவதோ திரைப்படம் பார்க்கும்போதே 🎥

மயங்கினேன் உன் வருகையால்
நாமோ ஒரு நாளும் பிரிந்ததில்லை
தினமும் சந்திப்போம்
விழி மூடி

நித்திரையே!!!

Sunday, 24 September 2017

ஆதிசக்தி

உன்னை நீ உணரும்போது உன்னில் இருக்கும் சக்தி ஆதிசக்தியாக வெளிப்படும்

அந்த சக்தியின் தீயில் உன்னை எரித்து எடுப்பாய் புதிதாய் ஒரு அவதாரம் 🔥🔥🔥


Saturday, 16 September 2017

சத்தம்போடாதே!!

இருளும் மின்வெட்டும்
அமைதியும் மழை சத்தமும்
அம்மாவின் சோர்வும் அவள் விடுங்குறட்டையும்
நானும் என் தனிமையும்

சத்தம்போடாதே!!!

என்று பிறக்கும் வீரம் !!



புதிதாய் பிறந்த பிள்ளையை சிரிக்கிறாய் என் முன்னே
என் நெஞ்சத்து பாரத்தை உன் ஸ்பரிசத்தால் நொறுக்கியவளே
உன் வருகையால், எனக்கே நான் வைத்த வரையறையை உடைத்தவள் நீ
சோதனையை சாதனையாக்கத் தெரிந்தவளே
ஒருபோதும் பாகுபாடு பார்க்க அறியாதவளே
எனக்கே என்னைப் புதுப்பித்து கட்டியவளே
நான் ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் என்னை தாங்கிப் பிடித்தவலே
மீண்டும் மீண்டும் எனக்குள் பிறக்கும் அந்தம் அற்றவளே
நானே என்னுள் உன்னை வளர்க்கும் அன்னையாவேனே
பயத்தை எதிர்த்துப் பிறந்தவளே

வீரம் !!!

மோதித்தான் பார்ப்போமே!!


-இரா ரூபினி