Tuesday, 20 November 2018

மழை

கொட்டும் மழை துளியே
 நீ நிலத்தில் ஆடும் ஆட்டத்தை ரசிப்பேன் !!
 கண்ணாடிக் கூண்டில் இருந்தே..
 சங்கமிப்போம் விரைவில்!




Tuesday, 11 September 2018

அர்ச்சனா

சின்னச்சிறு கதைகள் பேசவும் 
உணர்வுகள் பகிரவும்
சிரிப்பில் நிறையவும் 😁
பாதைகள் கடக்கவும் 👭
அதிகாரம் செய்யவும்
அராஜகம் பண்ணவும் 
ஜாடை செய்து மகிழவும்
உன் அருகில் நான் இல்லையடி 👧👩

குரல் கொடு தளம்  தாண்டி வருவேன்
தாமதித்தால் பொறுத்திரு 💓
நாம் ஒன்று கூடி உலகை நக்கல் செய்வோம் 👐
தோழமை வளர்ப்போம் 💖
பெண்மை போற்றுவோம் 👭

Sunday, 9 September 2018

MCRED


எத்தனைத் தடைகள் கடந்தோம்
எவ்வளவோ பாடம் படித்தோம்
புதுமைகள்  செய்தோம்
ஒன்றாக நேசம் வளர்த்தோம்

நீ கொடுத்த பாடங்கள், அனுபவங்கள், அறிமுகங்கள்
அத்துணையும் சேர்த்தெடுத்து கொண்டு
பறக்கிறேன் என் இடம் விட்டு புதியதோர் தொடக்கத்திற்கு
ஆசிர் வழங்கு!

நாம் வேறு தளத்தில் இருப்பின்
உன் இன்மையை நான் என்றும் உணர்வேன்.

Tuesday, 17 April 2018

மாயை

தொலைவில் தெரிவாய்
நெருங்கி வருவேன்
நீ மாயம் செய்வாய்
அட!! இது மாயம்
புரிந்து நான் நிகழ்வை தேடி போகிறேன், என்னை விடு என்று !
புரிந்தால் வருவாய் உணர்ந்து


Thursday, 14 December 2017

யோகா

மாடியில் யோகம்
நினைவலைகள் அடிக்க
விழித்துப் பார்த்தால்
பகல் நிலவில் ஒரு பகல் கனவு
வாடை காற்றின் புத்துணர்ச்சி
கார்த்திகை பனியின் ஈரம்
இளங்காளை கதிர் வீசி வரவேற்கிரது
ஒரு புதிய காலை..


Monday, 25 September 2017

நித்திரை

உன்னை அன்போடு  வரவேற்கிறேன் ஒவ்வொரு நாள் இரவும்
நீ வராத நாட்களெல்லாம் என்னுடைய பகலெல்லாம் வெள்ளை

உன் குறும்படத்தால், முடியாத ஆசையும் கருப்பு வெள்ளையாய்  கண் முன்னே காட்டுகிறாய்

சிலரிடம் நீ கனவில் கதைக்கிறாய்
பலரிடம்  நீ அசதியில்நகைக்கிறாய்

என் பெண்களுக்கோ உன்னுடன் அளவாட ஆசை தான்..
உண்மையில் நேரம் போவதோ, அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு மட்டுமே 😏

என்  அம்மாவை மட்டும் நீ அதிகம் பார்க்க வருவதோ திரைப்படம் பார்க்கும்போதே 🎥

மயங்கினேன் உன் வருகையால்
நாமோ ஒரு நாளும் பிரிந்ததில்லை
தினமும் சந்திப்போம்
விழி மூடி

நித்திரையே!!!

Sunday, 24 September 2017

ஆதிசக்தி

உன்னை நீ உணரும்போது உன்னில் இருக்கும் சக்தி ஆதிசக்தியாக வெளிப்படும்

அந்த சக்தியின் தீயில் உன்னை எரித்து எடுப்பாய் புதிதாய் ஒரு அவதாரம் 🔥🔥🔥