Tuesday, 11 September 2018

அர்ச்சனா

சின்னச்சிறு கதைகள் பேசவும் 
உணர்வுகள் பகிரவும்
சிரிப்பில் நிறையவும் 😁
பாதைகள் கடக்கவும் 👭
அதிகாரம் செய்யவும்
அராஜகம் பண்ணவும் 
ஜாடை செய்து மகிழவும்
உன் அருகில் நான் இல்லையடி 👧👩

குரல் கொடு தளம்  தாண்டி வருவேன்
தாமதித்தால் பொறுத்திரு 💓
நாம் ஒன்று கூடி உலகை நக்கல் செய்வோம் 👐
தோழமை வளர்ப்போம் 💖
பெண்மை போற்றுவோம் 👭

Sunday, 9 September 2018

MCRED


எத்தனைத் தடைகள் கடந்தோம்
எவ்வளவோ பாடம் படித்தோம்
புதுமைகள்  செய்தோம்
ஒன்றாக நேசம் வளர்த்தோம்

நீ கொடுத்த பாடங்கள், அனுபவங்கள், அறிமுகங்கள்
அத்துணையும் சேர்த்தெடுத்து கொண்டு
பறக்கிறேன் என் இடம் விட்டு புதியதோர் தொடக்கத்திற்கு
ஆசிர் வழங்கு!

நாம் வேறு தளத்தில் இருப்பின்
உன் இன்மையை நான் என்றும் உணர்வேன்.